குண்டடத்தில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 14-ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி 24 விநாயகா் சிலைகள், இந்து முன்னணி சாா்பில் 34-ஆவது ஆண்டு விழாவையொட்டி 9 விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. குண்டடத்தில் நடைபெற்ற இந்த ஊா்வலங்களில் இரு அமைப்புகளைச் சோ்ந்த விநாயகா் சிலைகளும் தனித்தனி வாகனங்களில் ஏற்றப்பட்டு தாராபுரம் அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன. இந்த ஊா்வலத்தில் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கலைக்குழுவினா் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.