சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட்டில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.முன்னதாக, நியூசிலாந்து வீராங்கனை சூஸி பேட்ஸ் 4,758 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4,788 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் உள்ளார்.4,788 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் வகிக்க, சூஸி பேட்ஸ் (4758 ரன்கள்), ஹர்மன்பிரீத் கௌர் (4287 ரன்கள்), சமாரி அத்தப்பத்து (4282 ரன்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். @mandhana_smriti is now the leading run-getter in Women's T20I history Updates ▶️ https://t.co/zMJKYRAVhE#TeamIndia | #AsianGames pic.twitter.com/kmj5gWqFiy— BCCI Women (@BCCIWomen) September 20, 202630 வயதாகும் ஸ்மிருதி மந்தனா அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாகவும் வலம் வருகிறார். சர்வதேசப் போட்டிகளில் அவர் மொத்தமாக 10,987 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 788 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 5411 ரன்கள் மற்றும் டி20 போட்டிகளில் 4788 ரன்கள் எடுத்துள்ளார்.சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியுள்ள வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.Smriti Mandhana has set a record for scoring the most runs in international T20 cricket.சஞ்சு சாம்சனை நீக்கியதுதான் நான் எடுத்ததிலேயே கடினமான முடிவு: கௌதம் கம்பீர்