நடிகைக்காக சட்டையைக் கழற்றிய சல்மான் கான்..! என்ன பிரச்னை?

Wait 5 sec.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் தனது மேலாடையைக் கழற்றி, “முடிந்தால் என்னையும் கேலி செய்யுங்கள்” எனக் கூறியது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகை காத்ரீனா கைஃப் மீதான சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் செய்த விமர்சனங்களுக்கு எதிராகவும் நடிகைக்கும் ஆதரவளிக்கவே சல்மான் கான் இவ்வாறு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகை கத்ரீனா கைஃப் தாயாகவிருப்பதால் அவரது உடல் எடை கூடியிருக்கிறது. இதனை வைத்து தொழில்முறை புகைப்படக்காரர்கள் கேலி செய்யும் நோக்கத்துடன் நடந்துகொள்வது பாலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது. இதனைக் கண்டித்து நடிகர் சல்மான் கான் தான் பங்குபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ஆடையைக் கழற்றி ஆவேசமாகப் பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது: யாராவது தயாகப்போகும் போது அவரைக் கேலி செய்வது ஏன்? கற்பமாகும்போது அனைவரது உடல் எடையும் கூடத்தானே செய்யும். அவர் மீண்டும் படம் நடிக்க வரும்போது ஃபிட்டாக மாறுவார். எனக்கு தற்போது 60 வயதாகிறது. என்னையும் வயதாகிவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள். எதற்காக என்னைக் கேலி செய்கிறார்கள்? யார் செய்கிறார்கள் என்பது தெரியும். நான் அதற்கெல்லாம் எதிர்வினை புரிவதில்லை. எனக்கு அதிகமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அதனால், இதில் கவலைப்படத் தேவையில்லை. அதனால், பேசுபவர்கள் பேசட்டுமென விட்டுவிடுவேன். முதலில் உங்களை நீங்களே பாருங்கள். உங்களது உடல், உங்களது பெற்றோர்களைப் பாருங்கள். பின்னர் வருண் தவானை, சோஹலைக் கேலி செய்யுங்கள். நான் கிழிந்த காலணிகளை அணிந்துள்ளேன். அதனால் எவ்வளவு முடியுமோ கேலி செய்யுங்கள். தொழில்முறை புகைப்படக்காரர்கள் நடிகைகளின் இடுப்பு, கால்கள், பின்புறம் இருந்தெல்லாம் புகைப்படங்களை எடுக்கிறீர்கள். இதெல்லாம் எந்த நடிகைகளுக்கும் பெண்களுக்கும் பிடிப்பதில்லை. யார் என்று கண்டுபிடியுங்கள் என தலைப்பை இடுவது எவ்வளவு அசிங்கம்? என்ன மாதிரியான மனநிலை இது? எனக் கடுமையாக விமர்சித்தார். நாடோடி, யாத்ரிகன்... கலீல் ஜிப்ரான் கவிதையுடன் மிஷ்கினை வாழ்த்திய இயக்குநர் ராம்!Salman Khan defends Katrina Kaif over online body-shaming; takes off his shirt and challenges trolls to mock him