பெரியோர் தொடர்பை விரும்பிக் கொள்ளுதல்

Wait 5 sec.

பெரியார் பெருநட்புக் கோடல்; தாம் செய்தஅரிய பொறுப்பவென் றன்றோ?-அரியரோஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!நல்லசெய் வார்க்குத் தமர்?(பாடல் 77 அதிகாரம்: பொறை உடைமை)ஒல்லென்று ஒலிமுழங்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! பெரியோர்களுடைய மேன்மையான தொடர்பினை யாவரும் விரும்பிக் கொள்ளுதல், 'தாம் செய்த பொறுத்தற்கரிய தவறுகளையும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்' என்றதனால் அல்லவோ? நல்லவைகளையே செய்பவர்களுக்கு நண்பராகச் சேருபவர்கள் அருமையானவர்களோ?