ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் தாஸ் 6ஆம் இடம் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 54.77 விநாடிகளில் இவர் இலக்கை எட்டினார். இறுதிப்போட்டிக்கு முன்பு நடந்த தகுதிப்போட்டியில் 54.85 விநாடிகளில் இலக்கை எட்டியிருந்தாலும், அவரின் புள்ளிகள் பதக்கம் வெல்வதற்கு போதுமானதாக இல்லை.ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டி நடைபெற்றது.இதில் இந்தியாவின் ரிஷப் தாஸ் கலந்துகொண்டு சிறப்பான பங்களிப்பை அளித்தார். இறுதிப்போட்டியில் இவர் 54.77 விநாடிகளில் இலக்கை எட்டி 6வது இடம் பிடித்தார். இது இவரின் தனிப்பட்ட சாதனையாக பார்க்கப்படுகிறது.எனினும் பதக்கம் வெல்வதற்கான முயற்சியில் இவர் பின்தங்கினார். சீனாவின் ஸு ஜியாவு 51.98 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ஜப்பானின் தகேஹரா ஹிடேகாஸு 53.93 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் லீ ஜூஹு 53.94 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துAsian Games 2026: Rishabh Das Finishes Sixth in 100m Backstroke Final