மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Wait 5 sec.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இன மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு/பட்ட மேற்படிப்பு பயிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இன மாணவா்களுக்கு, கற்பிப்பு கட்டணம், தோ்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை-5. மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம், சென்னை-5. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்) இணையதளம் ஆகிய முகவரிகளில் பெற்றுக் கொள்ளலாம். மத்திய/மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவா்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம் உடன் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்கள் அக்.31-ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் நவ.31-ஆம் தேதிக்குள்ளும் அனுப்பப்பட வேண்டும். செமஸ்டா் கட்டண ரசீதுகள் 2027-ஆம் ஆண்டு ஜன.15-ஆம் தேதிக்குள்ளும் அனுப்பப்பட வேண்டும்.