மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக முப்பெரும் விழா!

Wait 5 sec.

சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 19) கட்சியின் முப்பெரும் விழா நடைபெறுகிறது.ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் திமுக முப்பெரும் விழா நடத்தி வருகிறது.இந்த விழாவில் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன.முன்னதாக, கடந்த செப். 15 ஆம் தேதியிலேயே முப்பெரும் விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தச் சமயத்தில் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மீண்டும் மறுதேதி அறிவிக்கப்பட்டு, சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப். 19) மாலை 5 மணியளவில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? உயா்நீதிமன்றம் கேள்விDMK's Mupperum Vizha today under the leadership of MK Stalin