சிவகாசி அருகே பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் உள்ள கடை வீதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தாா். இதையடுத்து, போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் எம். புதுப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரன் (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனா்.