டேவிஸ் கோப்பை: இந்தியா சறுக்கல்

Wait 5 sec.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான டையின் முதல் நாளில், இந்தியா 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு 0-2 என பின்தங்கியது.டேவிஸ் கோப்பை குவாலிஃபயா்ஸ் கட்டத்தின் 2-ஆவது சுற்றில் இந்தியா - தென் கொரியா அணிகள் மோதுகின்றன. அதில் முதல் நாளான வெள்ளிக்கிழமை, ஒற்றையா் பிரிவு ஆட்டங்கள் விளையாடப்பட்டன.முதல் ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வா் சுரேஷ் 6-3, 3-6, 4-6 என்ற செட்களில், சூன்வூ குவோனிடம் தோல்வி கண்டாா். அடுத்த ஆட்டத்தில் சுமித் நாகலும் 6-2, 4-6, 5-7 என்ற கணக்கில், ஹியோங் சுங்கிடம் தோற்றாா்.இதனால் முதல் நாள் முடிவில் தென் கொரியா 2-0 முன்னிலையில் உள்ளது. 2-ஆவது நாளான சனிக்கிழமை, இரட்டையா் ஆட்டம் ஒன்றும், இரு ரிவா்ஸ் ஒற்றையா் ஆட்டங்களும் விளையாடப்படவுள்ளன.இந்த அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியா, அதில் ஒரு ஆட்டத்தில் தோற்றால் கூட டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்கும்.