தெலங்கானாவில் சாலை தடுப்புச் சுவர் மீது கார் மோதி தீப்பிடித்ததில் மருத்துவர் பலி

Wait 5 sec.

தெலங்கானாவில் சாலை தடுப்புச் சுவர் மீது மோதி கார் தீப்பிடித்ததில் மருத்துவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், சூர்யாபேட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் ஓட்டிச் சென்ற கார் சாலை தடுப்புச் சுவர் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்ததும் போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வாகனம் முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் மருத்துவர் உடல் கருகி பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். ஹைதராபாத்-கம்மம் நெடுஞ்சாலையில் உள்ள பில்லாலமரி மேம்பாலம் அருகே காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சம்பவம் குறித்து அந்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது, ஓட்டுநர் இருக்கையில் உடல் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அருகிலுள்ள சுங்கச்சாவடி மற்றும் வாகனத்தின் தற்காலிகப் பதிவு எண் ஆகியவற்றின் அடிப்படையில், பலியானவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் கே. ஜெகதீஷ் என்பது அடையாளம் காணப்பட்டது என்றார். குடும்பத்தினரைச் சந்திப்பதற்காகக் கம்மத்திலிருந்து ஹைதராபாத்திற்கு அந்த மருத்துவர் காரில் சென்று கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.A 50-year-old doctor was burnt alive after the car he was driving caught fire after hitting a road divider in Suryapet district of Telangana on Sunday, police said.பழனி மலைக் கோயிலில் செப்.22 முதல் மீண்டும் ரோப் கார் சேவை!