டோரதி பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ்!

Wait 5 sec.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள டோரதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’டோரதி’ என்ற புதிய படம் உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள “டோரதி” திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் கடந்த செப். 18ஆம் தேதி வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்துவந்த புடவை மிகுந்த வைரலாகி வருகிறது. இந்த ஆடையில் அவர் மிகவும் அழகாக இருப்பதாக சமூக வலைதளத்தில் கமெண்ட்ஸுகள் குவிந்து வருகின்றன. 1980-களில் நடைபெறும் புதுமையான கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் படம் வரும் செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. View this post on Instagram KEERTHY SURESH HELLO!!? pic.twitter.com/R8CxKNdp67— Liv (@LivSRKian13) September 20, 2026pic.twitter.com/aX0MPbyU9B— backup (@videosoffl) September 20, 2026இவரைப் போல வாழ வேண்டும்... ஜெயிலர் 2 பட அனுபவம் பகிர்ந்த விஜய் சேதுபதி! Keerthy Suresh steals the spotlight at the 'Dorothy' movie trailer launch event!