பிக் பாஸ் 10 : குடிகார அப்பா; தன்னம்பிக்கை அம்மா - கதை கூறி ரசிகர்களைக் கவர்ந்த ஷாதிகா!

Wait 5 sec.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதையை கதையாகக் கூறும் போட்டியில் தனது குடும்பத்தின் சூழல் குறித்து கதையாகக் கூறி நடிகை ஷாதிகா ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 2 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவியாக ஷமா தேர்வான நிலையில், அவரின் ஆட்சி இடையில் கவிழ்க்கப்பட்டது. பின்னர் முகேஷ் தலைவராகத் தேர்வானார். இதனிடையே இந்த வாரத்தில் ஒரு கத சொல்லட்டுமா என்ற டாஸ்க் போட்டியாக வைக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நாளும் 4 போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை கதையாகக் கூற வேண்டும். இந்த வாரத்தில் பலர் கதை கூறியிருந்தாலும், ஷாதிகா கூறிய கதை பலரைக் கவர்ந்தது. வார இறுதி நாளின்போது ஷாதிகா தனது வாழ்க்கையை மிகவும் அற்புதமாகக் கதையாகக் கூறியதாக பாராட்டினார். ஷாதிகாகத சொல்லட்டுமா போட்டியில் ஷாதிகா பேசியதாவது:''சினிமாவில் எதையாவது சாதித்துவிடமாட்டோமா? என்ற ஆசையுன் இருக்கும் பொண்ணுக்கும், பெண்ணை எதையாவது சாதிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அம்மாவுக்கும் இடையிலான கதைதான் என் வாழ்க்கை. 3 வயது முதல் என் செலவுகள் அனைத்தையும் நானே பார்த்துக்கொண்டேன். 3 வயது முதலே நடித்து வருகிறேன். பள்ளியில் 15 வயதில் படிப்பதற்காக நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். படிப்புதான் முக்கியம் என்பதை நான் தீர்மானித்தேன். என் பள்ளிப் படிப்படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தேன். பட்டப்படிப்பும் முடித்தேன். நான் யாரிடமே என் தனிப்பட்ட குடும்பம் பற்றி பகிர்ந்ததில்லை. நான், அம்மா, பாட்டி என்ற மூன்றுபேர் வித்தியாசமான பாத்திரங்கள் கொண்டதுதான் என் குடும்பம். என் தகப்பனைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. குடி, அடி, கண்ணீர், அவலம் அதுதான் என் அப்பாவால் எனக்கு நினைவில் இருப்பது. என் குடும்பத்தில் அம்மா - அப்பாவுடன் சேர்ந்த மாதிரி சந்தோஷமான நினைவு என்று ஒன்று கூட இல்லை. என் அம்மா எனக்காக என் தந்தையிடம் இருந்து பிரிந்தார். நான் 7 வயது இருக்கும்போது இந்த முடிவை எடுத்தார். நான் அந்த வயதில் இருக்கும்போதும் என்னிடம் என் விருப்பத்தைக் கேட்டார். நான் அம்மாவுடன் இருக்க முடிவு செய்தேன். அப்போது அவரிடம் இருந்து வரும் ஜீவனாம்சத்தில்தான் வாழப்போகிறோம் என என் தந்தையின் வீட்டார் நினைத்தனர். ஏளனம் செய்தனர். அவரிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கிக்கொள்ளாலம் என் அம்மா என்னை அழைத்துக்கொண்டு வந்தார். தனியொருத்தியாய் என்னை வளர்த்தார். சிறு வயதில் இருந்தே நடித்தேன். குடும்பத்தின் நிலையைப் புரிந்துகொண்டு என் செலவுகள் அனைத்தையும் நானே பார்த்துக்கொண்டேன். எங்கு ஆடிஷன் வந்தாலும் சென்று நடிப்பேன். முடிவில் தோற்றுவிடுவேன். ஆனால் தொடர்ந்து எல்லா ஆடிஷன்களுக்கும் சென்று என்னை பதிய வைத்துவிட்டு வருவேன்.படித்த நான், வேறு ஏதேனும் வேலைக்குச் சென்றிருக்கலாம். ஆனால் நான் சினிமா என்று நிலையாக இருந்தேன். என் அம்மாவும் என்னை ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. உனக்கு விருப்பமானதை செய் என்று மட்டும்தான் சொல்லிக்கொண்டு இருப்பார்.கிழவி ஆன பிறகுதான் சீரியல் நடிக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால், சீரியல் வாய்ப்பு வந்தது. அதனை எடுத்து நடித்தேன். வீட்டில் நானும் என் பாட்டியும்தான் சீரியல் பார்ப்போம். ஆனால், நான் நடித்த முதல் சீரியலை பார்க்க என் பாட்டி என்னுடன் இல்லை. அவர் தவறிவிட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் நான் வரும்போதுகூட என் அம்மாவிடமும், என் 5 நண்பர்களிடமும்தான் சொல்லிவிட்டு வந்தேன். இவர்கள்தான் என் வாழ்க்கையில் உள்ள மனிதர்கள். உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று என்னைப் பார்ப்பவர்கள் கூறுவார்கள். எனக்காக ஒரு அடையாளமே இல்லை. அதனை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் வந்துள்ளேன். பிக் பாஸ் வீட்டில் நான் பெறும் வெற்றிதான் என் வாழ்க்கையில் நான் பெறும் முதல் வெற்றி. அதன் பிறகு நான் அடுத்தடுத்த வெற்றிகளை நிச்சயம் எட்டுவேன்'' என ஷாதிகா பேசினார். ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் என் கதையைக் கூறி முடித்துவிட்டேன் அல்லவா? நிச்சயம் என்னை நினைத்து என் அம்மா பெருமைப்படுவார் என்று அம்மாவையும் நினைவுகூர்ந்தார். ஷாதிகாவின் கதையும் அந்த கஷ்டத்தை புன்சிரிப்போடு கூறியதும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது.பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?bigg boss 10 Shadhika captivated fans by telling a story