கல்லணையில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Wait 5 sec.

பழமையான கல்லணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் அதனைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழ மன்னரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கல்லணை, இன்றளவும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. தமிழக அரசால் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணை, டெல்டா மாவட்ட பாசன விவசாயிகளுக்கு நீரை பகிர்ந்தளிக்கும் முக்கிய பங்கை வகித்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட கல்லணை, மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் வந்து சேர்ந்ததால் தற்போது நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.இதனைக் காண தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக வந்து காவிரி ஆற்றில் குளித்தும், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை ரசித்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.As water gushes through the ancient Kallanai Dam, tourists are gathering in large numbers to witness the sight.தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு