ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஆளுநர் பதிவிட்டிருப்பதாவது, "ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் நபர் பிரிவில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது மிகச்சிறந்த செயல்திறன், அர்ப்பணிப்பு, விளையாட்டுச் சிறப்பானது நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளது. அவரது சாதனை ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இந்திய இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாய் இருக்கிறது.இளவேனில் வாலறிவன், வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளைப் பெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.இளவேனில் வாலறிவன் தமிழக வீராங்கனையா?Governor RV Arlekar congratulates Elavenil Valarivan on winning a silver medal at the Asian Games