திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பட்டிமன்ற பேச்சாளர்போல பேசுவதாக அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, "பட்டிமன்றப் பேச்சாளராக இருந்த நான், இப்போது சட்டப்பேரவையில் பேச ஆரம்பித்து விட்டேன். ஆனால், முன்னாள் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின், இப்போது பட்டிமன்றப் பேச்சாளராக ஆகிவிட்டார். எதுகை - மோனையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.தமிழ்நாட்டில் மக்களுக்கு யார் நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள் என்பதில்தான் போட்டி.கடந்த ஆட்சி வரையில் திட்டமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த சட்டப்பேரவை நேரலை, முதல்வர் உத்தரவின்பேரில் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் திமுகவினர் என்ன கொடுமையெல்லாம் செய்கின்றனர் என நேரலை மூலம் உலகத்துக்கே காட்டியிருக்கிறோம்.சட்டப்பேரவையைத் தொடக்கிவைக்கும் திருக்குறள் முதல் இத்துடன் பேரவை நிறைவடைகிறது என்ற கடைசி நொடி வரையில் முழுமையாக நேரலையில் ஒளிபரப்புவது இதுவே முதல்முறை.2024-ல் சட்டப்பேரவையை நேரில் பார்த்தவர்கள் சில ஆயிரம் பேர்தான். ஆனால், கடந்த 30 நாள்களிலேயே பல மடங்கில் பல்லாயிரக் கணக்கானோர் சட்டப்பேரவையை நேரில் வந்து பார்த்தனர். அவர்களில் பலரும் பள்ளி மாணவர்கள்தான். அலுவலக நேரங்களிலும், சமையல் நேரங்களிலும் பல கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர்.அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சினர் பேசியதும் நேரலையில் காட்டப்பட்டது" என்று தெரிவித்தார்.இதுபோன்ற சட்டப்பேரவையை தமிழக வரலாற்றிலேயே இதுவரை பார்த்ததில்லை: உதயநிதிMinister Rajmohan criticizes DMK Chief M.K. Stalin