உலகளவில் அதிகரித்துவரும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளை ஈடு செய்வதற்கான நம்பகமான மையமாக இந்தியா மாறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 17) தெரிவித்தார். தில்லியில் செமிகண்டக்டர் இந்தியா 2026 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:முக்கியமான தொழில்துறையில் வெற்றிகரமாக பயணித்துவரும் நமது நாடு, உலகளவிலான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துகின்றன. விநியோகச் சங்கிலி மோசமான நிலையை அடைந்தபோதும் நமது பங்களிப்பு சிறந்ததாக இருந்தது. இந்தியாவில் நிகழும் இத்தகைய மாற்றங்களை நாம் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். செமிகண்டக்டர் துறை பல்வேறு சவால்களை சந்திக்கிறது. சவால்களுக்கு மத்தியிலும் புதிய மற்றும் நம்பகமான உற்பத்தி மையங்களை உலகம் எதிர்பார்க்கிறது. இதனை முழு பொறுப்புணர்வுடன் கூறுகிறேன். இந்த பொறுப்பிற்காக இந்தியா தொடர்ந்து தயார்படுத்திக்கொண்டு இருக்கிறது. நாட்டில் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடக் கூடாது என வலியுறுத்திக்கொள்கிறேன். செமிகண்டக்டர் துறையில் 1 லட்சம் பொறியாளர்களை தயார்ப்படுத்த நமது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கெனவே 70,000 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். வளர்ந்துவரும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் பங்குபெற்று ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பயின்றுவரும் இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். இரவோடு இரவாக அனுமதியின்றி நிறுவப்பட்ட சித்தராமையா சிலை! India preparing to be a reliable hub PM Modi pushes semiconductor ambitions as global