டோரதி படத்தின் டிரைலர் அறிவிப்பு!

Wait 5 sec.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்தத் திரைப்படம் டோரதி. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1980-களில் நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்றைய காலத்து இளைஞர்களும் கொண்டாடும் விதமாக இளையராஜா பாடல்கள் அமைந்துள்ளன.டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சில நாள்களுக்கு முன் இப்படம் திரையிடப்பட்டது. அங்கு, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகக் கூறப்பட்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, டோரதி படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படம் வருகிற செப்.25 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.Dorothy movie trailer announcementடிமான்ட்டி காலனி - 3 படத்தை வெளியிடத் தடை!