உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!

Wait 5 sec.

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:மத்திய கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக கூடும். இத்தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுபெறுவதற்கு முன்பு தமிழ்நாட்டில் இரவு நேர வெப்பச்சலன மழையை தீவிரப்படுத்தும். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடிமழை இன்று முதல் கடலோர மாவட்டங்களிலும் மழை படிப்படியாக துவங்கும். காற்றழுத்த தாழ்வு பகுதியின் சாதகமான காற்று குவிதல் தமிழ்நாட்டின் மீது விழுவதன் காரணமாக செப் 19 முதல் 22 வரை 4 நாட்களுக்கு வெப்பச்சலன மழை தீவிரமடையும் எனப் பதிவிட்டுள்ளார். பாரதிதாசனுக்கு நிதி மறுப்பதா? தவெக அரசுக்கு அவப்பெயர் வேண்டாம்: மு.க. ஸ்டாலின்Weather update A new low pressure area is forming! Chance of rain from September 19