சுடானில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: 60 பேர் பலி!

Wait 5 sec.

ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் சரிந்து 60 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோர்டோபனில் உள்ள எல்-நஹொட் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா என்ற தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தங்கச் சுரங்கத்தில் 62 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் உயிரி பிழைத்தனர். கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுரங்க விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.