டயர் இல்லாமல் தரையிறங்கிய விமானம்! மேற்கூரைகளும் விழுந்தன, பயணிகள் அலறல்! எங்கே, எப்படி?

Wait 5 sec.

ஈரானில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் ஒரு டயர் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.ஈரான் நாட்டை மையமாகக் கொண்டு இயக்கப்படும் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் ஒன்று, மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுள்ளது.இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்துள்ளது. இதனால் விமானத்தின் என்ஜினில் கோளாறு மற்றும் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய விமானி, மஷ்ஹத் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக அவசர தரையிறக்கம் செய்தார்.விமானத்தின் உட்புற மேற்கூரை சேதம்என்ஜின் கோளாறு காரணமாக ஏற்பட்ட கடுமையான அதிர்வால் விமானத்தின் உட்புற மேற்கூரைகள், லைட்டுகள், தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பேக்குகள் போன்றவை சரிந்து பயணிகள் மேலே விழுந்தது.இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அதில், விமானம் விபத்துக்குள்ளாகப் போவதாக பயந்து பயணிகள் அலறும் சப்தங்களும், பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது.An aviation incident occurred in Iran involving a Sepehran Airlines Boeing 737-300. After a landing gear tire burst post-takeoff causing engine damage and severe vibrations the plane safely made an emergency landingNo injuries were reported among the 127 passengers. pic.twitter.com/DCYgZykQM5— Ramesh Speaks (@rameshofficial0) September 16, 2026யாருக்கும் காயம் இல்லைமஷ்ஹத் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளையும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த விபத்து தொடர்பாக ஈரான் விமானப் போக்குவரத்து துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.Plane lands without one tyre! Roof panels fell off, passengers screamed! Where and how?அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த என்பிசி ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி!