அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த என்பிசி ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி!

Wait 5 sec.

அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்துகொண்டிருந்த என்பிசி செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர்.லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சாட்ஸ்வொர்த் என்ற பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பான காட்சியை என்பிசி செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் நேரலை செய்துகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் இரண்டு கட்டடத்துக்கு இடையே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.என்பிசி செய்தியின் நேரலையின் போதே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் கீழே விழுந்தவுடன் நேரலை துண்டிக்கப்பட்டது.The incident happened an hour ago .. TV news helicopter crashes during the life shot of a bus crash in Los Angeles.The helicopter belongs to NBC LA . pic.twitter.com/H3amJZS1Ay— Mubarak. (@DrealMb) September 16, 2026இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி, செய்தியாளர் உள்பட மூவர் பலியானதாகவும், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்ஸ்வொர்த் பகுதியிலுள்ள வாகன நிறுத்தமிடத்தில் ஹெலிகாப்டர் விழுந்ததால் கட்டடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 4 வாகனங்கள் மட்டும் சேதமடைந்துள்ளது.இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.Helicopter covering US bus crash live met accident; three killed!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!