சமூக நீதிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் பாடுபட்டவர் ராமசாமி படையாச்சியார்! விஜய் புகழாரம்

Wait 5 sec.

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். "சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன். மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம்" என்று பதிவிட்டுள்ளார். சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன். மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி,… pic.twitter.com/yo1YPt9ICv— CMOTamilNadu (@CMOTamilnadu) September 16, 2026CM Vijay post on birth anniversary of freedom fighter Ramasamy Padayatchiarகவிதையாய் நிலைத்துவிட்ட கண்ணதாசன்!