இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா மீது ஹெளதிக்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். செளதி அரேபியா, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், செளதி அரேபியாவில் உள்ள மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் ஆகிய நகரங்கள் மீது ஹெளதி படைகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செளதி அரேபிய பாதுகாப்புப் படையினர் செய்திருந்தனர்.இந்தச் சூழலில், மெக்காவில் தெற்கே ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹெளதி படைகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்காரணமாக எச்சரிக்கை ஓசை எழுப்பப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல செளதி ராணுவம் அறிவுறுத்தியது.எனினும், ஹெளதிகள் ஏவிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் நடு வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக செளதி ராணுவம் அறிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் செளதி ராணுவம் விடுத்திருந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.மெக்கா நகரின் மீதான தாக்குதலால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Houthis launch drone and missile attack on Mecca!விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா: முதல்முறையாக ஒப்புதல்