டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்வோரின் கவனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு அட்டவணை பற்றிய தகவல்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் 2026 டிசம்பர் மாத ஒதுக்கீடு செப். 19-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புக்கிங் தொடங்குகிறது. அதேபோன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் டிக்கெட் செப்.22-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புக்கிங் தொடங்குகிறது. செப். 23-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அங்கப்பிரதட்சிணம் டோக்கன் பக்தர்கள் புக் செய்துகொள்ளலாம். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் புக்கிங் செப். 23-ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு தொடங்குகிறது. டிசம்பர் மாதத்தில் ரூ. 300 தரிசன கட்டணத்துடன் சுவாமி தரிசனம் செய்வோர் செப். 24-ஆம் தேதி காலை 10.00 மணிக்கும், அன்றைய தினம் அறை ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும், செப். 25-ஆம் 10.00-க்கு திருமலையில் உள்ள இதர கோயில்களின் சேவைகளும், சீனிவாச திவ்ய அனுக்கிரக விஷேச ஹோமம் உள்ளிட்ட சேவைகளின் ஆன்லைன் புக்கிங் தொடங்குகிறது. மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜாதகத்தில் ராகு தோஷமா? தடைகளுக்கு வழிகாட்டும் சீரடி சாயி பாபா!