சென்னை மெரினா கடற்கரையில், ஔவையார் சிலை அருகே மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளது.மெரினா கடற்கரைப் பகுதியில் ஔவையார் சிலைக்கு அருகே கண்டெய்னர்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தின் ஏசியிலிருந்து தீப்பற்றியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மெட்ரோ அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மெரினா சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டமாகக் காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டம் காரணமாக அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 2 வாகனங்களின் உதவியுடன் மெட்ரோ அலுவலகத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.