அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள லவ் ஓடிடி தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக அவர் நடித்துள்ள ‘லவ்’ தொடர் வெளியாகவுள்ளது. காதலில் சொதப்புவது எப்படி, மாரி படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். இதில், அர்ஜூன் தாஸ் உடன் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். காதல் கதைக்களத்தில் டேட்டிங் செயலிகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இத்தொடரின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து, லவ் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு இன்று வெளியானது. இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வருகிற அக்டோபர் 2 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது. The release date of the Arjun Das - Aishwarya Lakshmi starrer Love OTT series has been announced.ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்!