அமெரிக்கா உடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானின் போரில், முதன்மையானவராகக் கருதப்படும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார்.இந்த நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை இன்று (செப். 16) நேரில் சந்தித்த அராக்சி வளைகுடா போர் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார்.இத்துடன், இந்தச் சந்திப்பில் அமெரிக்கா உடனான மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை எனவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஓமன் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அராக்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இருதரப்பும் இணைந்து மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என சீன அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.ஏற்கெனவே, தில்லியில் நடைபெற்ற 18 ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உடன் பங்கேற்ற அமைச்சர் அராக்சி சீன அமைச்சர் வாங் யீ மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரைச் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!Iranian Foreign Minister Seyed Abbas Araghchi stated that Iran has no desire to continue the confrontation with the United States.