ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: கௌதம் அதானியை முந்தி முதலிடம் பிடித்த டிக் டாக் நிறுவனர்!

Wait 5 sec.

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி டிக் டாக் நிறுவனர் ஜாங் யிமிங் முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் உலகப் பணக்காரர்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இதில், ஆசிய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவின் கௌதம் அதானி தொடர்ந்து இடம்பிடித்து வந்தார். தற்போது, அதானியைப் பின்னுக்குத் தள்ளி டிக் டாக் செயலியின் நிறுவனரான ஜாங் யிமிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவன உரிமையாளரான ஜாங் யிமிங், முதல் முறையாக ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச்சில் அவரது சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 7 ஆண்டுகளில் அது 105 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பைட்டான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி டூபாவோ, சீடான்ஸ் என்கிற ஏஐ கருவிகளை உருவாக்கி ஏஐ துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதால் அவரது இந்த பிரம்மாண்ட வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.சமீபத்திய ஆசிய பணக்காரர்கள் தரவரிசையில் கௌதம் அதானியை ஜாங் பின்னுக்குத் தள்ளியது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நுகர்வோர் தளங்களின் செல்வாக்கு உலகளவில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.டிக் டாக் நிறுவனமும் இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். பல நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டாலும், அதன் உலகளாவிய பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு முதலீடு போன்றவை அவரை பெரும் பணக்காரராக மாற்றியுள்ளது.ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் முன்பே, சீனாவின் மிகப்பெரிய பணக்காரராக ஜாங் இருந்தது குறிப்பிடத்தக்கது.List of Asia's Richest People: TikTok Founder Surpasses Gautam Adani!சக்திவாய்ந்த ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்