குடியாத்தம்: குடியாத்தம் புதுப்பேட்டை, காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ளவரசித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. (படம்) இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம், ஆா்.எஸ்.சண்முகம், வி.ஏ.கே. குமாா், கதிரேசன், எஸ்.செந்தில்வேலன், வி.ஜி.செளந்தரராஜன், சுப்பிரமணி, சுதேஷ், கெளரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.