மேட்டூர் அணைக்கு நீர்வரத்துகுறைந்தது!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6360 கன அடியாக சற்று குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப்) காலை வினாடிக்கு 6441 கன அடியிலிருந்து வினாடிக்கு 6360 கன அடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு12,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.18 அடியிலிருந்து 86.85 அடியாக குறைந்தது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 49.12 டிஎம்சியாக உள்ளது.The water inflow to Mettur Dam decreased slightly to 6,360 cubic feet per second on Thursday morning.