தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர் விஜய், வியாழக்கிழமை காலை சென்னை திரும்பினார்.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியல் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள முதல்வர் விஜய், அதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப். 10 ஆம் தேதி முதல்முறையாக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது, முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆய்வு மேம்பாட்டு வசதிகளை நிறுவுவதற்காக, அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ரூ. 15,300 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.அதிகபட்சமாக, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், தனது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இதுதவிர, ஏர்ன்ஸ்ட் - யங் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி, பிரிட்டனைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த தொழில் முதலீடுகள் மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு முறை பயணமாக லண்டன் சென்றிருந்த முதல்வர் விஜய் 7 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப். 17) காலை சென்னை திரும்பினார். Chief Minister Vijay, who had gone to London to attract industrial investments, returned to Chennai on Thursday morning.