இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.இந்த நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தான் அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால், இந்த விவகாரத்தில் எந்தவொரு அடுத்தக் கட்ட விசாரணையும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.The ICC has imposed a fine on the Pakistan team for taking too long to bowl their overs during the final Test match against England.தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் இலங்கை வீரர்?