ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடி!முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டது. தொடக்கம் முதலே அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அதிவேகமாக சதம் விளாசி சாதனை படைத்தார். அவர் 34 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.. . One word for that record knock Updates ▶️ https://t.co/Zixki4RhPt#TeamIndia | #AFGvIND | @OfficialAbhi04 pic.twitter.com/VcO7UHQ9KR— BCCI (@BCCI) September 17, 2026அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்கள், ஷிவம் துபே 14 ரன்கள், இஷான் கிஷன் 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஷித் கான் மற்றும் அப்துல்லா அகமதுஸாய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.Batting first in the third T20 match against Afghanistan, the Indian team scored 221 runs for the loss of 7 wickets.என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பீட்டர்சன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஹாரி ப்ரூக்