மலேசியாவில் கல்வி பயிலும் மாணவர் பாரதிதாசனுக்குத் தமிழக அரசு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் தனக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகை இன்னும் வரவில்லை என்றும், இதனால், தன்னைக் கல்லூரியை விட்டு நீக்கப் போகிறார்கள் என்றும் கூறி கண்ணீருடன் இன்று (செப். 17) விடியோ வெளியிட்டுள்ளார். இந்த விடியோவில், ஆவணங்கள் அனைத்தும் முறையாகச் சமர்ப்பித்தும் தமிழக அரசு தனக்கு உரிய நிதியை விடுவிக்கவில்லை என்றும் ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்குச் செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், காரணம் என்னவாக இருந்தாலும் அவருடைய படிப்பு பாதிக்கும் வகையில் அரசு நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறி அவரின் கல்வியைத் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் அவர்களின் கல்வித் தொகை விடுவிக்க வேண்டி சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு. வன்னி அரசு அவர்களிடம் நான்கு முறை பேசி உள்ளேன். ஒரு பகுதி உதவித்தொகை விடுவிக்கப்பட்டது. காரணம் என்னவாக இருந்தாலும் அவருடைய படிப்பு பாதிக்கும் வகையில் அரசு நடந்து கொள்ளக் கூடாது. எனவே, உடனடியாக மீதி உதவித்தொகை முழுவதையும் அவருக்கு கிடைக்கச் செய்ய முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உதவிட வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.முன்னதாக, இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பாரதிதாசனுக்கு நிதி மறுப்பதா? தவெக அரசுக்கு அவப்பெயர் வேண்டாம்: மு.க. ஸ்டாலின்CPIM has urged the Tamil Nadu government to provide educational funding to Bharathidasan, a student pursuing his studies in Malaysia.