விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று(செப். 14) காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆண்டுதோறும் வரும் விநாயகர் சதுர்த்தி நாளன்று காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் உள்ள மூலவருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.ரூ. 1, ரூ. 2, ரூ. 5, ரூ. 10, ரூ, 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சந்நிதி மற்றும் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு ஏலேல சிங்க விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையடுத்து, ஏராளமான பக்தர்கள் புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து அருள்பாலித்த விநாயகரை பயபக்தியுடன் வேண்டி, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.மேலும், வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.On the occasion of Vinayagar Chaturthi today (Sept. 14), the Elela Singa Vinayagar deity, located on Sannidhi Street near the Kanchi Kamakshi Amman Temple in Kanchipuram, was adorned with currency notes worth rs. 25 lakh and blessed the devotees.பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்: அதிகாலையிலேயே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்