நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர், பேபி நக்ஷத்திரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இருமுடி (தமிழில் இருமுடி கட்டு) திரைப்படம் கடந்த ஆக. 21ஆம் தேதி வெளியானது. மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது.திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இந்தப் படம், உலகளவில் ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.வன்முறை வாழ்க்கை வாழ்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மகளின் விருப்பத்தின் பேரில் ஐயப்பனுக்கு மாலை போடுவதும், அதனால் அவரது வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களுமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற வில்லாதி வில்லனே என்ற சாமி பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.இந்த நிலையில், இருமுடி கட்டு திரைப்படம் வரும் செப். 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.The OTT release date for actor Ravi Teja's film Irumudi has been officially announced.ஓடிடியில் வெளியாகும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட உளவியல் த்ரில்லர்!