மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6069 கன அடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை வினாடிக்கு 7,599 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,069 கன அடியாக சற்று குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.82 அடியிலிருந்து 87.65 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 50 டிஎம்சியாக உள்ளது.மூன்றில் ஒரு வேலைவாய்ப்பு சுற்றுலாத் துறையில் உருவாகிறது! சுமன் பில்லாWater inflow to Mettur Dam decreases