தனியாா் கல்லூரியில் ரோபோ யானை மீது வலம் வந்த விநாயகா்

Wait 5 sec.

உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். தனியாா் மருந்தியல்  கல்லூரியில் ரோபோ யானை மீது வலம் வந்த விநாயகா் விசா்ஜன நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்துடன் மாணவா்கள் கொண்டாடினா். உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். தனியாா் மருந்தியல்  கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் ரோபோ யானை மீது எழுந்தருளி ஊா்வலமாக வந்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி. தனபால், கல்லூரி முதன்மை அலுவலா் பசவண்ணா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விநாயகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் ஆட்டம், பாட்டம் மற்றும் உற்சாக கொண்டாட்டங்களுடன் விழாவில் பங்கேற்றனா். ரோபோ யானையில் விநாயகா் சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகே இருந்த குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டது.