முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

Wait 5 sec.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.60 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது குறித்து கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றமும் இல்லாததால் இங்கும் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ. 5.60 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 110-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 120 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.