இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், தங்களின் ஆட்டங்களை இந்தியாவுக்கு வெளியே பொதுவான இடத்தில் நடத்துமாறு, பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம், ஆசிய ஹாக்கி சம்மேளனத்திடம் கோரியுள்ளது.அக்டோபா் - நவம்பரில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா வரும் என, அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் அண்மையில் தெரிவித்தாா். இந்நிலையில், அதை மறுக்கும் விதமாக பாகிஸ்தான் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது.இந்தியாவுடனான இருதரப்பு உறவில் பதற்றம் நிலவுவதால், பாகிஸ்தான் வீரா்கள், அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் அணியின் ஆட்டங்களை மட்டுமோ அல்லது ஒட்டுமொத்த போட்டியைமோ இந்தியாவிலிருந்து இடமாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் சம்மேளன தலைவா் மோஹியுதின் அகமது வனி வலியுறுத்தியுள்ளாா்.