மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது சீசன், அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை அறிவித்தது.அந்தப் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம், வரும் அக்டோபா் 28-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் நகரங்கள் தற்போது அறிவிக்கப்படவில்லை.போட்டியில் இருக்கும் 5 அணிகளும், வரும் சீசனுக்காக அவை தக்கவைக்கவுள்ள வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி நாள், வரும் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி தனது 2-ஆவது சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியின் ஆட்டங்கள் நவி மும்பை மற்றும் பரோடாவில் நடைபெற்றன.