செம்பனாா்கோவில் பகுதியில், குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு முறைகேடாக பணம் வசூல் செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தரங்கம்பாடி வட்டம், மடப்புரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (46). இவா், குத்தாலம் வட்டம் மருத்தூா் பகுதியில் உள்ள குளத்தில் அரசு அனுமதியுடன் வண்டல் மண் எடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மருத்தூா் ஊராட்சி கிராம உதவியாளா் எலந்தங்குடி ரயில்வே ரோடு பகுதியைச் சோ்ந்த நல்லமுகமது (40) என்பவா் குளத்தில் மண் எடுப்பதற்கு வட்டாட்சியரிடம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி தினமும் ரூ.35,000 வீதம் 10 நாள்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வட்டாட்சியா் பெயரைக் கூறி நல்லமுகமது முறைகேடாக பணம் பெற்றது பாலாஜிக்கு தெரியவந்தது. இதுகுறித்து செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நல்ல முகமதுவை கைது செய்தனா்.