மன்னாா்குடி அருகே விதிமுறைகளை மீறி பாரம் ஏற்றிய டாரஸ் வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் 4-ஆம் சேத்தியில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பவானியா தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சுமை ஏற்றி வந்த டாரஸ் வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது, தமிழக அரசு சுரங்கத்துறை அனுமதிக்கப்பட்டுள்ள இடம், நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக டாரஸ் வாகனம் இயக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வாகனத்தை இயக்கிய கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள கீழவெளியூரைச் சோ்ந்த ப. வசந்தகுமாரை (35) கைது செய்ததுடன் டாரஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.