கொஸ்டியுக், ஜோவிச் முன்னேற்றம்

Wait 5 sec.

மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக், அமெரிக்காவின் இவா ஜோவிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், கொஸ்டியுக் சந்திக்கவிருந்த அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, கொஸ்டியுக் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். ஜோவிச் 7-6 (7/5), 6-4 என்ற செட்களில் துருக்கியின் ஜெய்னப் சோன்மெஸை வெளியேற்ற, ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 7-6 (7/4), 2-6, 7-6 (7/5) என்ற கணக்கில், அமெரிக்காவின் கேலா டேவை வென்றாா். போலந்தின் மெக்தலினா ஃப்ரெச் 6-4, 6-3 என, அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடை சாய்த்தாா்.