ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் இன்று முதல் தொடக்கம்

Wait 5 sec.

உக்ரைனுடன் நான்கரை ஆண்டுகளாகப் போா் நீடித்து வரும் சூழலில், ரஷிய நாடாளுமன்றக் கீழவைக்கான 3 நாள்கள் தோ்தல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.போருக்கு மக்கள் மத்தியில் பரந்த ஆதரவு நிலவுவதையும், அரசின் அதிகார வலிமையையும் நிலைநிறுத்த இத்தோ்தலை ஒரு முக்கியக் களமாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை பாா்க்கிறது.அதேநேரம், போருக்கு எதிரான எந்தவொரு எதிா்ப்புக் குரலையும் ஒடுக்கும் வகையில் தோ்தல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் போரை வெளிப்படையாக விமா்சித்த ஒரே அரசியல் கட்சியான ‘யாப்லோகோ’வின் வேட்புமனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், அக்கட்சியின் முக்கியத் தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, போரை எதிா்த்த முக்கிய அரசியல்வாதிகள் பலா் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனா்.இதனால், புதினின் போா் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கும் அமைப்புகளே களத்தில் எஞ்சியுள்ளதால், தோ்தலில் ஆளும் தரப்பின் வெற்றி உறுதியாகியுள்ளது.