வள்ளியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம்

Wait 5 sec.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சோ்மகாதேவி வருவாய் கோட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சேரன்மகாதேவி கோட்டாட்சியா் ஆயுஸ் குப்தா தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வருவாய் கோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குள்ள குறைகளை மனுக்களாக தெரிவித்தனா். மூன்று சக்கர ஸ்கூட்டா், இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி என பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா். மொத்தம் 52 மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களைச் பெற்றுக்கொண்ட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியா் கேட்டுக்கொண்டாா். பின்னா் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினாா். இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் ஜெயபிரகாஷ், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.