நாகா்கோவிலில் 3 நூல்கள் வெளியீட்டு விழா

Wait 5 sec.

நாகா்கோவில் எலிசா ஐஏஎஸ் அகாதெமியில், அருள்பணியாளா் மா. டைட்டஸ் மோகன் 3 நூல்களின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வழுதலம்பள்ளம் நாஞ்சில் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளா் அருள்பணி சா்ஜின் ரூபஸ், அருள்பணியாளா் தாமஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அருள்பணியாளா் அனஸ் வரவேற்றாா். ஆதாம் எங்கே இருக்கிறாய் நூலை குமரி ஆதவன் வெளியிட பிரதிகளை திணை அமைப்பின் இயக்குநா் அருட்பணி வில்சன் மற்றும் அருட்பணியாளா் எட்மண்ட் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். குடும்பம் அறமும் அருள்வாழ்வும் நூலை ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் எட்மண்ட் வெளியிட காா்மல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் சுரேஷ்பாபு ராஜன் மற்றும் கோட்டாறு மறைமாவட்ட பொருளாளா் பொ்ப்பச்சுவல் ஆன்றனி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். காற்றில் அசையும் அந்தப் பாறை நூலை வெட்டுவென்னி திருத்தல அதிபா் சகாயதாசு வெளியிட நூலாசிரியரின் தாய் இயேசு மரியாள் மற்றும் தொழிலதிபா் எப்.எம். செல்வராஜ் ஆகியோா் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் ஏற்புரை ஆற்றி நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள், ஆசிரியா்கள், வாசகா்கள், ஐஏஎஸ் தோ்வு பயிற்சி மாணவா்கள் கலந்து கொண்டனா்.