சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்களுக்கு வேண்டுகோள்

Wait 5 sec.

குடியாத்தம் நகராட்சியில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும்அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதாகவும், சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாலும் அம்மரங்களை முற்றிலும் அழிக்குமாறு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியாத்தம் நகராட்சி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் தங்களது சொந்த செலவில் அவற்றை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், தங்களின் காலி மனைகள் மற்றும் நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளராத வகையில் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்குமாறும், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீா் வளத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.