நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவாகி வரும் “பிக்னிக்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் புதிய மலையாள படம் “பிக்னிக்”. இந்தப் படத்தின் மூலம் பிரேமலு, பெத்லகேம் குடும்ப யூனிட் படங்களின் இணை எழுத்தாளர் கிரண் ஜோஸே இயக்குநராக அறிமுகமாகிறார்.ஆழப்புலா ஜிம்கானா, படக்களம், எகோ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் சந்தீப் பிரதீப் இந்தப் புதிய படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.நடிகர்கள் திலீஷ் போத்தன், இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் “பிக்னிக்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை (செப். 18) அன்று வெளியிட்டுள்ளனர். இத்துடன், 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இவரைப் போல வாழ வேண்டும்... ஜெயிலர் 2 பட அனுபவம் பகிர்ந்த விஜய் சேதுபதி! The first-look poster of the film "Picnic," produced by actor Fahadh Faasil, has been released.