ஷேன் வார்னேவுக்குப் பிறகு... சாதனைப் பட்டியலில் இணைந்த ஆடம் ஸாம்பா!

Wait 5 sec.

ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா (34 வயது) ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. 356/6 ரன்கள் குவிக்க, ஜிம்பாப்வே 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதன்மூலம் ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். ஒருநாள் போட்டியில் எழாவது ஆஸ்திரேலிய வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சுழல் பந்து வீச்சாளர்கள் வரிசையில் இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஷேன் வார்னே மட்டுமே 200க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பிரெட் லீ, க்ளென் மெக்ராத் 380 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். ஒருநாள் போட்டிகளில் 200+ விக்கெட் வீழ்த்திய ஆஸி. வீரர்கள் 1. பிரெட் லீ - 380 விக்கெட்டுகள் (217 இன்னிங்ஸ்) 2. க்ளென் மெக்ராத் - 380 விக்கெட்டுகள் (247 இன்னிங்ஸ்)3. ஷேன் வார்னே - 291 விக்கெட்டுகள் (190 இன்னிங்ஸ்)4. மிட்செல் ஸ்டார்க் - 247 விக்கெட்டுகள் (130 இன்னிங்ஸ்)5. மிட்செல் ஜான்சன் - 239 விக்கெட்டுகள் (150 இன்னிங்ஸ்)6. க்ரைக் மெக்டோர்மெட் - 203 விக்கெட்டுகள் (138 இன்னிங்ஸ்)7. ஆடம் ஸாம்பா - 210 விக்கெட்டுகள் (123 இன்னிங்ஸ்)தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்கும்போது காயம்..! இந்தியா உடனான தொடரில் ரச்சின் ரவீந்திரா விலகல்! Adam Zampa becomes the second Australian spinner to take 200 wickets in ODIs after Shane Warne